கோத்தகிரியில் அனைவருக்கும் உபயோகப்படும் அன்புமேடை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 26 July 2024

கோத்தகிரியில் அனைவருக்கும் உபயோகப்படும் அன்புமேடை



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேருந்து நிலையம் முன்பு கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தால் அன்பு மேடை அமைக்கப்பட்டு உபயோகத்தில் உள்ளது இரண்டு வாரங்களுக்கு முன்பு அன்புமேடை விரிவாக்கம் விழா நடந்தது. 

இந்த அன்பு மேடையில் வைக்கப்படும் ஆடைகள் 1 மணி நேரத்திற்க்குள் பயணாளர்கள் எடுத்து உபயோகம் செய்கின்றனர் என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு ஏற்றார் போல் இன்று மதியம் நாம் காணும் போது இருந்த ஆடைகள் மாலையில் உபயோகப்படுத்த எடுத்துசெல்லப்பட்டதை காண முடிந்தது.

கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் பல வழிகளில் பொதுமக்களுக்கு உறுப்பினர்களின் சொந்த செலவில் நற்பணிகள் மேற்கொண்டுவருகின்றனர். இந்த அன்பு மேடைக்கு பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள்  மிகுந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad