கூடலூரில் ஆர்டிஓ அலுவலகம் முன்பாக தர்னா போராட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 22 July 2024

கூடலூரில் ஆர்டிஓ அலுவலகம் முன்பாக தர்னா போராட்டம்



யானை வழித்தட விரிவாக்கம் ரத்து செய்ய வேண்டும் என மாநிலம் தழுவிய தர்ணாபோராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று கூடலூரில் ஆர்டிஓ அலுவலகம் முன்பாக தர்னா போராட்டம் நடைபெற்றது

  


தர்னா போராட்டத்தை மாநில விவசாய சங்கத்தின் தலைவர் தோழர் டில்லி பாபு X(MLA) அவர்கள் துவக்கி வைத்தார் , 

கூடலூர் மக்களின் 50 ஆண்டு கால பிரச்சனையாக இருக்கக்கூடிய கைவச பூமிகளுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும் எனவும்

 இதற்கான சட்ட திருத்தத்தை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


மின்சார இணைப்பில்லாமல் தவிக்கும்  மக்களுக்கு உடனடியாக மின்சார இணைப்பு வழங்க வேண்டும் எனவும் 

மனித வனவிலங்கு மோதல்கள் தடுக்க விஞ்ஞான ரீதியான நடவடிக்கைளை மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களோடு கலந்து ஆலோசித்து அரசு அமல்படுத்த வேண்டும் எனவும் 

வனவிலங்கால் உயிர் இழப்பவருக்கு அரசு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் பாதிக்கபட்ட குடும்பத்தாருக்கு ஒருத்தருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் போராட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்ளப்பட்டது.


போராட்டத்தில் விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் என் வாசு தலைமை  தாங்கினார் 

விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர்கள் தோழர்  யோகனன்   

 விவசாய சங்க மாவட்ட பொருளாளர் தோழர் குஞ்சம் முகமது வரவேற்புரை நிகழ்த்தினார் ,

கட்சியினுடைய மாவட்ட செயலாளர் தோழர்  வி எ பாஸ்கரன் சிறப்புரையாற்றினார் ,

ஏரியா கமிட்டி செயலாளர்கள் இருக்கக்கூடிய தோழர்கள்  ராஜன், ரமேஷ், எம் ஆர் சுரேஷ் மற்றும் வர்க வெகுஜன அமைப்புகளின் நிர்வாகிகள் மாதர் சங்கத்தின் தலைவர் தோழர் கே எஸோதா DYFI மாவட்ட செயலாளர் தோழர் சுதர்சனன் மற்றும் நூற்றுக்கணக்கான தோழர்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்விற்கு விவசாய சங்க ஏரியா  கமிட்டி செயலாளர் தோழர்  கோபி நன்றி கூறினார்..


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad