நீலகிரி மாவட்டம் கடல் மட்டத்தில் இருந்து 2,000 மீட்டர் அதாவது 6,600 அடி உயரத்தில் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம். தமிழகத்தில் சுற்றுலாவிற்கு முக்கியமான மாவட்டமாக திகழும் நீலகிரிக்கு பிற மாவட்டத்தில் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இவ்வாறு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதால் நீலகிரியில் வாகன போக்குவரத்தும் அதிகமாக இருக்கிறது நீலகிரிக்கு வரும் பெரும்பாலான பயணிகள் சாலை மார்க்கமாகத்தான் வருகின்றன மேலும் உள்ளூர் மக்களும் பிற தேவைகளுக்கு அருகில் சாலை மார்க்கமாகத்தான் சென்று வருகின்றனர் இதுபோன்ற சூழலில் மலை மாவட்டமான நீலகிரியில் எதிர்பாராமல் ஏற்படும் மண் சரிவு சாலை போக்குவரத்து தடைப்படுவதற்கு பெரும் காரணமாக உள்ளது. எனவே மண் உறுதிப்படுத்தல் மற்றும் மண் சரிவை தடுப்பதற்காக நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படுவது இன்றியமையாதது என அரசு உணர்ந்துள்ளது அந்த வகையில் மண் சரிவினை தடுக்க நவீன முறையில் மண் ஆணி. ( Soil nailling) பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மண் ஆணி பொருத்தும் திட்டம் கோடப் மந்து பகுதியில் தொடங்கப்பட்டது இந்நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இந்த புதிய தொழில்நுட்பத்தில் மண் ஆணி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மாவட்ட ஆட்சியர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் இந்த பகுதிகளை ஆய்வு செய்திருந்தார்.
மலையின் செங்குத்தான சரிவில் மண் அரிப்பை தடுத்து நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மண் ஆணி அமைத்து ஜியோ கிரிட் வழியாக மண்ணின் உரிய தன்மையை அதிகரித்து 'ஹைட்ரோ சீடிங்' முறையில் புல் வளர்க்கப்படுகிறது முதலில் மழையின் சாய்வு கோணம் 70 டிகிரிக்கு மிகாமல் தளர்வான மண்ணை அகற்றி மேற்பரப்பு சீராக்கப்படுகிறது. மண் ஆணி அமைத்தல் என்பது செங்குத்தான மலைப் பகுதியில் மண் சரிவை தடுக்க மண் மேற்பரப்பில் துளையிட்டு வலுவூட்டப்பட்ட இரும்பு கம்பிகளை நிலை நிறுத்தும் நவீன தொழில்நுட்பமாகும். 'ஹைட்ரோ சிடிங் ' என்பதே புல் விதை தழை கூளம் நிறுக்கப்பட்ட மரப்பட்டை வைக்கோல் போன்ற பொருட்களால் ஆன நீர் உறிஞ்சி தேக்கி வைக்கும் எனவே ஈரம் காயாமல் பூக்களின் வளர்ச்சியை உறுதி செய்கிறது.
இந்த மண் ஆணி பொருத்தி மண் சரிவை தடுக்கும் முறையில் முதலில் மண்ணின் மீது தண்ணீர் ஊற்றப்பட்டு நனைந்த பின் அதன் மீது புல் வளர விதைத்து விடப்படுகிறது பின்னர் அவை வளர்ந்த பின்னர் அதன் மீது வலையமைப்பு அமைக்கப்பட்டு அதில் பெரிய அளவிலான ஆணிகள் அமைக்கப்படுகிறது. இவ்வாறான செயல்முறையில் புல் வளர்ந்து மண்ணுக்குள் வேர் நன்கு ஊடுருவி மண் உறுதி அமைகிறது மேலும் இந்த பலமான ஆணிகளினால் பொருத்தப்பட்டிருக்கும் வலை அமைப்பினால் மண் சரிவு ஏற்படுவது தடுக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் தற்போது இந்த தொழில்நுட்பம் நீலகிரியில் பல்வேறு முக்கிய சாலைகளிலும் மண் சரிவு ஏற்படாத வண்ணம், முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment