பயிர்களை காக்க விவசாயிகள் கோரிக்கை.படிச்சேரி கிராமத்தில் காட்டு யானையால் நேந்திர வாழைத்தோட்டம் சேதம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 1 July 2024

பயிர்களை காக்க விவசாயிகள் கோரிக்கை.படிச்சேரி கிராமத்தில் காட்டு யானையால் நேந்திர வாழைத்தோட்டம் சேதம்

  நீலகிரி மாவட்டம்  அய்யன்கொல்லி படச்சேரி கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் நேந்திர வாழை இலை விவசாயம் செய்துள்ளனர். பல பகுதிகளில் நேந்திர வாழைகள் அறுவடைக்கு தயாராக உள்ளது இந்த நிலையில் உணவு தேடி காட்டுப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.     


இந்த நிலையில் நேற்று இரவு நேரத்தில் விளை நிலத்தில் புகுந்த காட்டு யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த நேந்திர வாழைகளை சேதப்படுத்தியது இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.      இயந்திர வாழை தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானையை நீண்ட நேரம் வாழைத்தோட்டத்திற்குள் சுற்றி திரிந்து விவசாயிகள் கூச்சலிட்டு போராடி விரட்டியும் காட்டு யானை தோட்டத்தில் முகாமிட்டதோடு நேந்திர வாழைகளை சேதப்படுத்தியது.    சுமார் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த இயந்திர வாழை இலை காட்டு யானை சேதப்படுத்தியதாக வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள் அரசு நிவாரணம் தர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   மேலும் நாள்தோறும் காட்டு யானைகளால் அச்சமடைந்து விவசாய பயிர்களை காக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் வனத்துறையினர் காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள்  விரட்டி தங்களின் விவசாய பயிர்களை காக்க உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad