ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதால் உண்டாகும் தீமைகள் குறித்து அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் பொருட்களை நாம் அதிகம் பயன்படுத்துவதனால் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது ஆகவே நாம் அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் அதேபோல் இந்த சமுதாயத்தில் உள்ள அனைத்து மக்களுக்கு இதன் தீமைகளை பற்றி எடுத்துரைத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
உதகை சேரிங்கிராஸ் உழவர் சந்தை பகுதியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்காள் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மாணவர்கள் ஆசிரியர்கள் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உணவுப் பொருட்களை உன்ன மூங்கில், கரும்பு தாழ்களால் ஆனா தட்டுக்கள் வாழை இலை போன்றவற்றை பயன்படுத்தலாம். பொதுமக்கள் கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது மறந்து விடாமல் துணி பைகளை எடுத்துச் செல்லுங்கள் என கோரிக்கை விடுத்தனர். நெகிழிகள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளையும் நோய்களையும் விளக்கி கூறினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment