நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதி தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட இரண்டாம் நம்பர் மற்றும் மாணிக் கல்லாடி பகுதியில் நேற்று இரவு காட்டு யானை புகுந்து அங்கு நின்று கொண்டிருக்கும் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியது. இறைவன் அருளால் மக்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை இரு வாகனத்திலும் பயணிகள் மற்றும் வாகன உரிமையாளர்களும் சம்பவ இடத்தில் இல்லை.
இந்த தொடர் காட்டு யானைகளின் தொடர் தாக்குதலால் மனித உயிர்கள் பல பலியாகி உள்ளன என்பதால் இது போன்ற பல வாகனங்களும் வீடுகளும் சேதமடைந்துள்ளது இதற்கு பல போராட்டங்கள் நடத்தியும் முடிவு காணாத வகையில் இன்றும் அப்பகுதி மக்கள் வீடுகளில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டனர் இதற்கு மேலாவது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment