தமிழக - கேரள எல்லை பகுதியான வயநாடு, மலப்புரம், பாலக்காடு பகுதிகளில், சில ஆண்டுகளாக நக்சல்கள் நடமாட்டம் தலை துாக்கியுள்ளது.
வனத்தில் முகாமிட்டு பழங்குடியின கிராமங்களுக்கு சென்று, அரசு மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடுவது, போராட்டத்திற்கு ஆதரவு கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவில் அரசு அலுவலகங்கள் மற்றும் சோதனைசாவடிகள் மீது தாக்குதல் நடத்தும் செயலிலும் ஈடுபட்டு வந்து உள்ளனர்.
நக்சல் நடமாட்டத்தை தடுக்க எல்லை யோரப் பகுதிகளில் அதிரடிப்படை, நக்சல் தடுப்பு பிரிவு, கேரளாவில் தண்டர்போல்ட் அதிரடிப்படை, கர்நாடகாவில் சிறப்பு அதிரடிப் படை போலீசார் என, வனத்தில் ஆங்காங்கே கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நக்சல் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளான மொய்தீன், சோமன், சந்தோஷ் ஆகியோர் தேர்தல் சமயத்தில், வயநாடு அருகே கம்பமலை எஸ்டேட் பகுதியில் பகல் நேரத்தில், தொழிலாளர்கள் மத்தியில் வந்து தேர்தலுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டு சென்றனர்.
இந்நிலையில், நக்சல் மனோஜ் கடந்த வாரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வனத்திலிருந்து நக்சல்கள் மொய்தீன், சோமன், சந்தோஷ் ஆகியோர் எர்ணாகுளம் பகுதியிலிருந்து ரயில் வாயிலாக கோவை, ஈரோடு பகுதிக்கு சென்றிருக்கலாம் அல்லது வயநாடு பகுதியில் நக்சல் ஆதரவாளர்களுடன் தங்கி இருக்கலாம் என்றார்.
இதையடுத்து, மாநில அதிரடிப்படை போலீசார் தேடுதல் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்
கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment