குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் விபத்து.
நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் 6வது கொண்ட ஊசி வளைவில் நெய்வேலியிலிருந்து வந்த சுற்றுலா பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. தவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடன் அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளையின் நிர்வாகி திரு. தமிழ் அரசன் அவர்களும் திரு சாதிக் அவர்களும் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 3 குழந்தைகள் உட்பட 11 பேர்களுக்கு சிறு சிறு காயங்களுடன் மட்டும் ஏற்பட்டுள்ளது அதிரஷ்டவசமாக பெரிய பாதிப்புகள் இல்லை என்பது ஆறுதல்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment