கனவு நாயகன் டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்களின் 9ம் ஆண்டு நினைவு தினம் நேற்று (27/07/24) குன்னூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் திருவுருவபடத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது...
அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை நிர்வாகிகள், மக்கள் நற்பணி மய்யம் கௌரவத் தலைவர் ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையிலும் வியாபாரிகள் சங்க செயலாளர் திரு.ரஹீம்,சிட்டிசன் போறோம் திரு ஜெபரத்தினம், நல் உள்ளம் திரு.சண்முகம்,அனைத்து பொது நல வியாபாரிகள் சங்க நிர்வாகிகள்,ஐஸ்வர்யா கணஸ்ட்ரக்சன் திரு.ஜான் மேத்யூ ஏலிம் திருச்சபை போதகர் திரு.ஜான் பாஸ்கோ,நீலகிரி மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் மத போதகர் திரு முஹம்மது மம்நூன் உலூமி அவர்களும்,வாகன ஓட்டுனர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள்,சமூக ஆர்வலர்கள் ,பொதுமக்கள் என பலரும் டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்களின் திரு உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்...
அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் மக்கள் நற்பணி மய்யம் தலைவர் கண்டோன்மென்ட் திரு.வினோத்குமார் அவர்கள் நன்றியுரை வழங்கினார்....
இந்நிகழ்வின் ஏற்பாட்டை அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment