வனவிலங்குகளால் பயிர் சேதம் பாதிப்புகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தில் இணைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தல் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 17 July 2024

வனவிலங்குகளால் பயிர் சேதம் பாதிப்புகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தில் இணைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தல்



 வனவிலங்குகளால் பயிர் சேதம் பாதிப்புகளுக்கு உள்ளாகும் விவசாயிகளை உரிய முறையில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் இணைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது...



 இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பெ சண்முகம் சிபிஎம் சட்டமன்ற குழு தலைவர் நாகை மாலி ஆகியோர் விடுத்துள்ள கோரிக்கை என்னவென்றால் தமிழ்நாட்டில் யானை, காட்டுப்பன்றி, குரங்கு, மான், மயில், காட்டெருமை, ஆகிய வனவிலங்குகள் வேளாண் பயிர்கள் அழிக்கப்படுகிறது. குறிப்பாக நீலகிரி, தென்காசி, கன்னியாகுமாரி, விருதுநகர், கோவை, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், சேலம், தேனி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம், திருவள்ளூர், திருப்பத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம், ஆகிய 20 மாவட்டங்களில் பாதிப்பு மிக கூடுதலாக இருக்கிறது. இந்நிலையில் பயிர் அழிவுக்கு வனத்துறையால் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை பாதிப்பை ஈடு செய்யும் வகையில் இல்லை என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் வனவிலங்குகளால் ஏற்படுத்தப்படும் பயிர் பாதிப்புக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது ஆனால் அதற்குரிய பிரீமியம் தொகை எவ்வகையான பயிர் எந்தெந்த விலங்குகளால் போன்றவற்றை மாநில அரசு குறிப்பிட்டு அறிவிக்க வேண்டி உள்ளது.


 எனவே தமிழ்நாட்டில் வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் பாதிப்புகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு தங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறோம் அத்துடன் வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் பாதிப்புகளுக்கு வனத்துறையினால் வழங்கப்படும் இழப்பீடு தொகையை பயிர்களின் பாதிப்புக்கு ஏற்ப இரண்டு மடங்குகளாக உயர்த்தி வழங்கிட தேவையான நடவடிக்கைகள் எடுத்து விவசாயிகளை பாதுகாத்திட முன்வர வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad