கும்பகோணம் பள்ளிக்கூடத் தீ விபத்து என்பது 2004, சூலை 16 ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. அது ஒரு பள்ளியின் பணத்தாசை காரணமாக இவ்விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். இறந்த குழந்தைகள் அனைவரும் 7 வயதிலிருந்து 11 வயதுக்குட்பட்டவர்களாவர். 18 நபர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டது. விபத்திற்கு உலகமே கண்ணீர் வடித்தது. இந்த தீ விபத்து மதிய உணவு தயாரிக்கும்போது பள்ளியின் கீழ்த்தளத்தில் மதிய உணவு சமைப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கீற்று ஓலைகள் அருகில் யாரும் இல்லாத தருணத்தில் தீப்பிடித்து பள்ளிக்கூடம் முழுவதும் மல மலவென்று தீ பரவியது .
இந்த அபாயகரமான விபத்திற்கு பின் தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளும் கட்டமைப்பு விதிமுறைகளும் கொண்டுவரப்பட்டன. இந்த நினைவு தினத்தை ஒட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த நினைவு தினத்தை ஒட்டி குழந்தைகளுக்கு வருடம் தோறும் அஞ்சலி செலுத்துவார்கள். ஆனால் இன்றைய தினத்தில் கனமழை காரணமாக ஆரஞ்சு அலாட் நீலகிரி மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும் அவர்களின் மறைவு நமது மனதை விட்டு நீங்காது..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment