மஞ்சூரில் மின்வாரிய அலுவலக துவக்கப்பள்ளியில் காமராஜரை கொண்டாடிய மாணவிகள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 16 July 2024

மஞ்சூரில் மின்வாரிய அலுவலக துவக்கப்பள்ளியில் காமராஜரை கொண்டாடிய மாணவிகள்

     


  நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய அலுவலக துவக்கப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றார்கள். கர்மவீரர் காமராஜரின் 122 வது பிறந்த தினத்தை கொட்டும் மழையிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டனர். மாணவ மாணவிகளுக்கு காமராஜரை பற்றி சிறப்பு கட்டுரைப் போட்டி பேச்சுப்போட்டி ஓவிய போட்டி நடத்தப்பட்டன.


 தலைமை ஆசிரியர் ஜெயந்தி மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் காமராஜர் அவர்களின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது அதை தொடர்ந்து தலைமை ஆசிரியர் ஜெயந்தி கர்மவீரர் காமராஜரை பற்றிய வாழ்க்கை வரலாறு ஆனா காமராசர் 15 ஜூலை (1963 - அக்டோபர் இரண்டு 1975 ) ஓர் இந்திய விடுதலை போராட்ட ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார் இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராக பதவி வகித்தார் இவர் 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக பணியாற்றினார் அப்பொழுதே லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி ஆகியோர் இந்திய பிரதமர் பதவிக்கு உயர்த்தப்படுவதற்கு காரணமாக இருந்தார் இதன் காரணமாக 1968 களில் இந்திய அரசியலில் இவர் "கிங் மேக்கர்"  (அரசர்களை உருவாக்குபவர்) என்று பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்டனர் பின்னர் இவர்  காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக இருந்தார் பிறப்பிற்குப் பின் காமாட்சியாக அறியப்பட்ட காமராசர் பள்ளி படிப்பை ஆரம்பத்திலேயே நிறுத்தி விட நேர்ந்தது. இவர் 1920 களில் இந்திய சுதந்திர இயக்கத்தில்  ஈடுபட்டார். இந்த  செயல்பாடுகள் காரணமாக பிரித்தானிய அரசர் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார் 1927இல் காமராசர் சென்னை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது மீண்டும் மூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.


 இந்திய சுதந்திரத்திற்கு பிறகு  1952 முதல் 1954 வரை மக்களவை உறுப்பினராக பணியாற்றினர் பின்னர் ஏப்ரல் 1954ல் சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் பதவியை ஏற்றார். ஏறக்குறைய 10 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த இவர் மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கேற்றினார் குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் தமிழகத்தில் கல்வியை மேம்படுத்துவதில் இவர் ஆற்றிய பங்கின் காரணமாக கல்வி தந்தை என்று அழைக்கப்பட்டார் காமராஜர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர் கருப்பு காந்தி படிக்காத மேதை பெருந்தலைவர் கர்மவீரர் என்று புகழ்பெற்றவர் காமராஜரின் மறைவுக்குப் பின் 1976 இல் இந்திய அரசு இவருக்கு மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்கி கௌரவப்படுத்தியது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையம் மற்றும் பல தெருக்கள் மற்றும் கட்டிடங்களுக்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது முழு கதைகளையும் மாணவர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் வரலாற்றை எடுத்துரைத்தனர் பின்பு கட்டுரை பேச்சுப் போட்டி ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது முடிவில் உதவி ஆசிரியர் சபிதா ஆசிரியர்கள் நாகராஜ் ரோஷினி அமுதா  சித்ரா மும்தா ஆகியோர்கள் உடன் இருந்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad