நீலகிரி மாணவர்களுக்கு அறிவியல் இயக்கத்தின் பாராட்டு விழா. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 22 July 2024

நீலகிரி மாணவர்களுக்கு அறிவியல் இயக்கத்தின் பாராட்டு விழா.

 


நீலகிரி மாணவர்களுக்கு  அறிவியல் இயக்கத்தின் பாராட்டு விழா.



தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் துளிர் ஜந்தர் மந்தர் திறனறிதல் போட்டி நடைபெறுகிறது கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் மேற்கு மண்டல அளவில் சிறப்பாக மதிப்பெண் பெற்று சாதனை புரிந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது கல்லூரி முதல்வர் முனைவர் திரு.ஜெயக்குமார் அவர்கள் முன்னிலையில்  நடந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நீலகிரி மாவட்ட அறிவியல் இயக்க தலைவர் மற்றும் தலைமை ஆசிரியருமான திரு. சங்கர் அவர்கள் தலைமை தாங்கினார் 



நீலகிரி மாவட்ட அறிவியல இயக்க செயலர் திரு. மணிவாசகம் அவர்கள் முன்னிலை வகித்தார் கூடலூர் பகுதியைச் சேர்ந்த அத்திக்குன்னா கிராமத்தைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் திரு. அசோக் குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் விஞ்ஞானி திரு. அசோக் குமார் அவர்கள் 15 க்கு மேற்பட்ட நாடுகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு இருந்தார் மேலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவரது ஆய்வுக்கு பாராட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது தற்போது அமெரிக்காவின் நாசாவிற்கு விசிட்டிங் ப்ரொபசர் என்ற தகுதியும் பெற்றுள்ளார் அவர் தமது சிறப்பு உரையின் போது திடக்கழிவு மேலாண்மையில் மைக்ரோ ஆல் கே எனப்படும் நுண்ணுயிரிகளின் பங்கு பற்றி விரிவாக பேசினார் இந்த நுண்ணுயிரிகள் கழிவு நீரில் 75% தூய்மைப்படுத்தி நல்ல நீராக மாற்றும் இந்தத் திட்டத்தில் செலவு என்பது பூஜ்ஜிய அளவிலானது என்று கூறினார் ஒவ்வொரு கிராமமும் மற்றும் பள்ளி அளவிலும் கூட இந்தத் திட்டத்தை பயன்படுத்தி திடக்கழிவு மேலாண்மையை திட்டமிடலாம் என்று கூறினார் இந்த நிகழ்ச்சியின் போது நீலகிரி மாவட்டத்தின் சார்பாக நடைபெற்ற  2023 ஆம் ஆண்டு  திறனறிவு போட்டியில் சிறப்பாக சாதனை புரிந்த கோத்தகிரி கேர்க்கம்பை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் பூபாலன் கரியஞ்சோலை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் அபிலாஷ் கூடலூர் அல் ஹிதா மெட்ரிக் பள்ளி மாணவர் ஜம்ஷித் ஓவேலி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி நிவேதிதா புளியம்பாறை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் ரூபஸ்ரீ துர்கா லட்சுமி  ஆகியோருக்கு பாராட்டுதல்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான திரு. கே.ஜே. ராஜு அவர்கள் தமது வாழ்த்துரையில்  கடந்த இரண்டு ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் கணிதம் என்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளதாக கூறினார் மேற்கண்ட சாதனை புரிந்த மாணவர்களையும் அவர்களுக்கு உதவி புரிந்த ஆசிரியர்களையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச் செயலர் திரு. முகமது பாதுஷா அவர்கள் மற்றும் காரமடை அருகில் உள்ள கிரைஸ்ட் இன்ஜினியரிங்  கல்லூரியின் முதல்வர் முனைவர் திரு. ராஜ்குமார் அறிவியல இயக்கத்தின் மாநில  பொறுப்பாளர்கள் திரு. தியாகராஜன், மெகருன்னிசா திரு.கண்ணபிரான், திரு.ரிஷி, திரு.சரவணன், திரு.ராமகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் இறுதியில் திரு. மணி அவர்கள் நன்றி கூறினார்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K .A . கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad