நீலகிரி மாவட்ட எஸ்பி யாக பணிபுரிந்து வருபவர் சுந்தர வடிவில் இவரது மனைவி நேற்று காரில் கோவைக்கு மேட்டுப்பாளையம் வழியாக சென்று கொண்டிருந்தார். இந்த காரை முதல் நிலை காவலர் தமிழ் குடிமகன் (32) ஓட்டினார். கார் கல்லாறு அருகே வந்து கொண்டிருந்தபோது அப்போது ஊட்டி காந்தல் பகுதியைச் சேர்ந்த தனியார் காட்டேஜ் ஊழியர் அல்தாப் (21) அவரது நண்பரான அரசு கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் முகமது ஜூனைத் (19) உள்ளிட்ட இருவரும் பைக்கில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சென்றனர் கல்லார் அருகே சென்றதும் எதிர்பாராத விதமாக அல்தாப் சென்ற பைக் நீலகிரி எஸ்பி யின் மனைவி வந்த காரின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர் கார் மீது மோதிய வேகத்தில் நடுரோட்டில் பைக் தீப்பிடித்து எறிந்தது இதை பார்த்த அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு முதலுதவி சிகிச்சை அளித்தபின் இருவரும் கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அல்தாப். படுகாயம் அடைந்த முகமது ஜூனைத் தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார் இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment