நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை மையப்பகுதியில் அமைந்துள்ள தினசரி சந்தை ஆங்கிலேயர்களால் மிகச் சிறப்பான முறையில் கட்டப்பட்டது. இச்சந்தை உலகம் தர வாய்ந்த சந்தையாக திகழ்ந்தது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த இச்சந்தையில் மக்களுக்குத் தேவையான அனைத்து வகையான பொருட்கள் காய்கறிகள், பழங்கள் என்று பலதரப்பட்ட பொருட்களை வியாபாரம் செய்து வந்தனர். சந்தையானது உதகை நகராட்சியின் வசம் உள்ளது
. சுமார் 1500 கடைகள் உதகை மார்க்கெட்டில் உள்ளது. எனவே தற்பொழுது இதை ஹைடெக் மார்க்கெட்டாக உருவாக்க நகராட்சி நிர்வாக முடிவு எடுத்திருப்பதால் சுமார் 200 கடைகளை அப்புறப்படுத்தி விட்டு பணிகளை மேற்கொண்டனர். அனைத்து வியாபாரிகளுக்கும் மாற்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இப்பணிகள் கடந்த ஆறு மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தில் பார்க்கிங் தல வசதியோடு அமைக்க உதகை நகராட்சி முடிவு செய்து தற்போது பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உள்ளூர் வியாபாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பெரிதும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுள்ளார்கள்.
தமிழக இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டத்தில் இருந்து மாவட்ட புகைப்பட கலைஞர் என். வினோத்குமார்.
No comments:
Post a Comment