உதகை நகராட்சி நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டு பராமரித்து வந்த உதகை மத்திய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள பாறை முனீஸ்வரன் ஆலயத்தின் அருகில் அமைந்துள்ள சட்டமேதை, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு பூங்காவானது ஒரு சில வருடங்களுக்கு முன்பு உதகை நகராட்சியின் முயற்சியால் உருவாக்கப்பட்டு நல்ல பொலிவுடன் காணப்பட்டு வந்தது.
தற்பொழுது சில வருடங்கள் இந்த பூங்காவை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாததால் பூங்கா முழுவதும் செடிகளும் கொடிகளும் புதர்களும் நிறைந்து மிகவும் கேவலமாக காணப்படுகிறது. பூங்காவின் நுழைவாயிலில் உள்ள கேட் திறக்கப்பட முடியாமல் இருக்கிறது நல்லவேளையாக கேட் திறக்க முடியாதபடி இருப்பது நல்லது கேட் திறந்திருந்தால் உள்ளே இந்த பூங்காவை கால்நடைகள் ஆக்கிரமித்து இருக்கும் மட்டுமல்லாது சமூக விரோத செயல்களும் இதில் அரங்கேறி இருக்கும்.
கேட் திறக்க முடியாதால் யாரும் உள்ளே செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது இந்த நிலை உள்ளதற்கு நகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி கூற தான் வேண்டும். எனவே இதனை உடனடியாக உதகை நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மறுபடியும் சட்ட மேதை, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்காரின் நினைவு பூங்காவை சீர்படுத்தி சரி செய்து பராமரித்து பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் பூங்காவிற்கு வந்து செல்லும் படி மக்களுடைய பயன்பாட்டுக்கு விட வேண்டுமாய் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் உடன் உதகை நகர செய்தியாளர் விஜயராஜ் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment