மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டுகிறது.
தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக உணவு தேவையை பூர்த்தி செய்வதில் மேட்டூர் அணை பெரும் பங்கு வகிக்கிறது. தற்போது கர்நாடகாவில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிறம்பியதால் உபரிநீர் வினாடிக்கு 1.50 லட்சம் கண அடி நீர் திறந்து விடுவதாலும் கர்நாடகாவில் மழைபொழிவதாலும் மற்றும் மேட்டூர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவின் காரணமாகவும் மேட்டூர் அணை மள மள வென நிறம்பத்தொடங்கி நீர்மட்டம் உயர்ந்தது. 120 அடிகள் கொள்ளளவு கொண்ட அணை 108 அடிகளை தாண்டி நிறம்பிக்கொண்டிருக்கிறது. ஓரிரு நாட்களில் முழு கொள்ளளவான 120 அடிகளை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு தண்ணீரின்றி ஆடிப்பெருக்கு கொண்டாடிய மக்கள் இந்த ஆண்டு மகிழ்ச்சியுடன் ஆடிப்பெருக்கு கொண்டாட தயாராகி வருகின்றனர். நெற்பயிர்கள் பயிரிட விவசாயிகள் தங்கள் நிலங்களை தயார்செய்துகொண்டுள்ளனர். இந்த ஆண்டு மேட்டூர்அணையிலிருந்து திறந்து விடப்படும் நீர் காவிரியின் கடைமடை பகுதி வரை செல்லும் ஆகையால் விவசாயம் செழிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment