உதகை - குடிநீர் குழாய் சீரமைப்பு பணி.
நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த ஒருமாத காலமாக மழையின் காரணமாகவும் வரலாறு காணாத ஆடி காற்றின் காரணமாகவும் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து விழுகின்றன மின் கம்பத்தின் மேல் மரங்கள் விழுந்ததில் மின் துண்டிப்பு ஏற்பட்டு மின் மோட்டார்கள் இயக்க முடியாததால் உதகை நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது நகராட்சி நிர்வாகத்தினர் லாரிகளில் குடிநீர் சப்ளை செய்தனர்.
தற்போது குடிநீர் ஆதாரமான பார்சன்ஸ் வேலி அணை நிறம்பும் தருவாயில் உள்ளது அதிலிருந்து வரும் குழாய்கள் மரம் விழுந்ததில் சேதமடைந்து நீர் வீணடைந்துவந்தது. இதை உதகை நகராட்சி ஊழியர்கள் காற்று மழை என பாராமல் மிகுந்த சிரமத்திற்க்கிடையே குழாய்களை சீரமைத்தனர். இந்த பணியை உதகை மக்கள் அனைவரும் மனதார பாராட்டுகின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment