மாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திடக்கோரி மாபெரும் மறியல் போராட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 3 July 2024

மாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திடக்கோரி மாபெரும் மறியல் போராட்டம்



 இன்று  காலை 11 மணியளவில்.  ஏடிசி      அருகே  உள்ள ஜீப் ஸ்டாண்ட் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு தலைமை  மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்  முருகேசன் ஜெயசீலன் அண்ணாதுரை மற்றும்  ஆசிரியர் ஆசிரியர்களும்  கலந்துக்கொண்டு தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை வைத்து தமிழ்நாடு அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் பல்வேறு கோரிக்கை கோஷங்களை எழுப்பினார்கள். 


இந்த கோஷங்களில் அவர்கள் கோரிக்கைகள் பழைய பென்சின் திட்டத்தை அமல்படுத்த கோரியும். 30 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தியும் தொடக்கக்கல்வி சங்கங்களின் கருத்தை கேட்காமலேயே ரகசியமாய் பொல்லாத அரசானையாகிய 243ஐ வெளியிட்டதை  கண்டித்தும் லட்சக்கணக்கான ஆசிரியர்களை பாதிக்கின்ற அரசாணை 243ஐ . உடனடியாக ரத்து செய்ய கோரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களை பாதிக்கின்ற மற்றும் தொடக்கக்கல்வி குழந்தைகளின் கல்வி சூழலை பாதிக்கின்றன பொல்லாத  அரசானையாகிய 243ன்றை உடனடியாக ரத்து செய்யக் கோரியும். 60 ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வந்த. ஒன்றிய முன்னுரிமையை ரத்து செய்வதின் ரகசியம் என்னவென்றதையும் . தமிழக அரசு தங்களுக்கு பதில். சொல்ல வேண்டும் என்ற கோஷங்களையும் எழுப்பினார்கள். பிறகு அவர்கள் அனைவரையும் காவல்துறையினர்கள் கைது செய்து. அவர்கள் அனைவரையும் தனியார் மினி பேருந்துகளில் ஏற்றி  காவல்துறையினர்கள் அழைத்து சென்றார்கள்.


நீலகிரி மாவட்டம் தமிழககுரல் இனையத்தள செய்திகளுக்காக உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழககுரல் இனையத்தள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad