நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கனமழை மிகுந்த காற்றுடன் இடைவிடாது பெய்து வருகிறது.இதனால் பல இடங்களிலும் மரங்கள் விழுந்து மின்கம்பங்கள் சரிந்துள்ளது.இதனால் பல இடங்களில் மின் சேவை தடைபட்டுள்ளது.தற்போது பந்தலூர் கூமூல பகுதியில் கனமழையின் காரணமாக மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர் மரம் விழுந்ததில் சேதம் அடைந்தது.இதனால் அப்பகுதியில் மின்விநியோகம் தடைபட்டுள்ளது.மின் இணைப்பை சரி செய்யும் பணியில் மின்சார ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்
கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment