நீலகிரி பூண்டின் விலை அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 26 July 2024

நீலகிரி பூண்டின் விலை அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

   


  நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக உருளைக்கிழங்கு கேரட் முட்டைகோஸ் பீட்ரூட் பீன்ஸ் போன்ற காய்கறிகள் அதிகளவு பயிரிடப்படுகின்றன இதற்கு அடுத்ததாக நீலகிரி பூண்டு பயிரிடப்படுகிறது பூண்டு மாவட்டத்தின்  குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே பயிரிடப்படுகிறது எப்ப நாடு தேனாடு கம்பை நஞ்சநாடு இத்தலார் போன்ற பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது சாதாரணமாகவே நீலகிரி பூண்டிற்கு காரம் மற்றும் எடை அதிகம் என்பதால் மார்க்கெட்டில் மற்ற பூண்டுகளை காட்டிலும் இதற்கு கிராக்கி அதிகம். 


சீனாவில் இருந்தும் ஹிமாச்சல் பெங்களூர் ராஜஸ்தான் புனே போன்ற பகுதிகளில் இருந்தும் அதிகளவு போன்று ஏல மண்டிற்கு வருகின்றது இதனையே சிலர் நீலகிரி பூண்டி என விற்கின்றனர் ஆனால் பெரும்பாலான கடைகளில் தற்போது நீலகிரி போன்று கிடைப்பதில்லை ஒரு சில கடைகளில் மட்டுமே கிடைக்கிறது இந்நிலையில் ஊட்டி பூண்டு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 500 வரை விலை தரத்திற்கு ஏற்றவாறு விலை போகிறது இந்த பூண்டு மார்க்கெட்டிற்கு வந்தால் பெரும்பாலும் வெளி மாநில விவசாயிகள் அதிகளவு வாங்கி செல்வதாக கூறப்படுகிறது இந்த கூண்டுகளை வாங்கிச் சென்று அவைகளை விதைகளாக பயன்படுத்தி அந்த மாநிலங்களில் நீலகிரி பூண்டே விளைவித்து அதிக லாபம் பார்ப்பதாக கூறப்படுகிறது இதன் காரணமாக நீலகிரியில் விளையும் பூண்டுகள் மார்க்கெட்டில் விற்பனைக்கு வருவது அரிதாகவே உள்ளது ஊட்டி மார்க்கெட் பூண்டு வியாபாரிகள் கூறுகையில் தற்போது நீலகிரி போண்டிற்கு விலை அதிகமாக உள்ளதால் வெளி மாநில பூண்டுகளே அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது


 நீலகிரி பூண்டு சந்தை மற்றும் வண்டிகளில் கிடைப்பதில்லை சில வெளிமாநில விவசாயிகள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து வாங்கிச் செல்கின்றன தற்போது சீனா இமாச்சல் பிரதேசத்தில் இருந்து வரும் பூண்டுகளே அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது நீலகிரி பூண்டு குறைந்த அளவு கிடைப்பதே கடினமாக உள்ளது என்கின்றனர் மேலும் விவசாயிகள் தரப்பில்  நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது கடந்த ஒரு வாரமாக நீலகிரி பூண்டிற்கு விலை அதிகமாகவே கிடைத்து வருகிறது கிலோ ஒன்று ரூ. 400 முதல் 500 வரை விற்பனை ஆகிறது இதனால் தற்போது அறுவடை செய்து வருகிறோம் என்றனர் விவசாயிகள். நீலகிரி பூண்டு இத்தகைய விலை விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad