கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட வெள்ளை பூண்டு மண்டிகள் உள்ளன இங்கு நேற்று நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து தலா 40 கிலோ கொண்ட 300 பைகள் மற்றும் வெளி மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் இருந்தும் காஷ்மீரில் இருந்தும் வெள்ளைப் பூண்டு லோடு கொண்டுவரப்பட்டது. இத்தன வகை பூண்டுகள் கிலோ ரூபாய் 400-க்கு விற்பனையானது. இந்த திடீர் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் பூண்டில் முதலீடு அதிகம் என்பதால் குறைந்த விலைக்கு பூண்டு விற்பனையானால் விவசாயிகளால் கடன் மட்டுமே கட்ட முடியும்.
நீலகிரி மாவட்ட இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment