நீலகிரி மாவட்டம் உதவி வன பாதுகாவலர் வன பாதுகாப்பு படை உதவி அவர்களுக்கு நாடுகாணி அருகில் புலியின் பற்கள் நகங்கள் விற்பனை செய்வதாக ரகசிய தகவல்கள் வந்தன இதைத்தொடர்ந்து வன பாதுகாப்பு படை தீவிர சோதனை மேற்கொண்டது. அப்பொழுதே சந்தேகத்தில் இடமாக சுற்றி வந்த ஆமைகுளம் பால் மேடு பகுதியை சேர்ந்த மூவரை வன பாதுகாப்பு படை குழுவால் புலியின் பற்கள் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இவர்கள் நாடு காணி வனசரக அலுவலருக்கு மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டனர் பின்பு கூடலூர் மாவட்ட வன அலுவலர் அவர்களின் உத்தரவுபடி உதவி வன பாதுகாவலர் தலைமையில் புலன் தீவிர விசாரணை மேற்கொண்டு அவர்களிடம் இருந்த புலியின் நகங்கள் மற்றும் பற்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு நேற்று மாலை பந்தலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நீதிபதியிடம் ஆஜர் படுத்தி அவர் ஆணைக்கு இணங்க மூவரையும் நீதிமன்ற காவலிருக்காக கூடலூர் கிளை சிறையில் உட்படுத்தப்பட்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment