பொன்னானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் மூன்று லட்சம் நிதியுதவி அறிவிப்பு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 20 July 2024

பொன்னானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் மூன்று லட்சம் நிதியுதவி அறிவிப்பு.





நீலகிரி மாவட்டம், சேரங்கோடு கிராமம், பாலவயல் பகுதியிலுள்ள பொன்னானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.


நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், நெல்லியாளம் கிராமத்தைச் சேர்ந்த செல்வன்.குணசேகரன் (வயது 18) த/பெ.குமார் என்பவர் இன்று (20.07.2024) பிற்பகல் 01.30 மணியளவில் சேரங்கோடு கிராமம், பாலவயல் பகுதியிலுள்ள  பொன்னானி ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும், வேதனையும்அடைந்தேன்.மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad