நீலகிரி மாவட்டத்தில் மழை மிகவும் அதிகமாக பெய்து வருவதால் சாலையோரங்களில் ஆங்காங்கே மரங்கள் அதிக அளவில் விழும் அபாயம் உள்ளது. இன்று முள்ளிகொரை பகுதியில் ஒரே நிமிடத்தில் 5 மரங்கள் விழுந்த நிலையில் இரண்டு பேர் வாகனத்தில் மாற்றிக் கொண்டனர். இரண்டு நபர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்கள். மற்றும்மெயின் பஜார் பகுதியில் வீடு இடியும் நிலையிலிருந்து இரண்டு வயதானவர்களை மீட்டு அப்துல் கலாம் இல்லத்தில் சேர்க்கப்பட்டார்கள். மேலும் குன்னூர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு உதகை தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. மேலும் உதகை தலைமை அரசு மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று ஆதரவு இல்லாமல் இருந்த ஆறு நபர்களை மீட்டு அப்துல் கலாம் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.. இன்று ஒரு நாள் மட்டும் எட்டு நபர்களை வைக்கப்பட்டது.. ஆகையால் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் கவனத்துடனும் பொறுமையுடனும் பொது இடங்களுக்கு சென்று வருவது மட்டுமல்லாமல் வாகனத்தில் மிகப் பொறுமையாக செல்வது அவசியம் ஆகும் என்பதை தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்
.தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment