நீலகிரி மாவட்டம் எமரால்டு பகுதி ஒரு சுற்றுலா தலம் ஆகும். உதகையிலிருந்து அவலாஞ்சி சுற்றுலா தல த்திற்கு செல்வதற்கு இது ஒரு சிறந்த வழியாகும். மற்றும் எமரால்டு பஜாரில் எமரால்டு வாகன ஓட்டுநர் நல சங்கம் என ஒரு குழு உள்ளது. அங்கு ஏராளமான வாகனங்கள் வாடகைக்காக நிறுத்தி வைக்கப்படுகிறது. மற்றும் அவ்வழியாக எமரால்டு அரசு மேல்நிலைப் பள்ளிக்காக மற்றும் பேருந்திற்காக அலுவலகத்திற்காக மளிகை கடை நியாய விலை கடை என அனைத்து தேவைகளுக்கும் எமரால்டு பஜார் பகுதிக்கு மக்கள் நாட வேண்டி உள்ளது....
டிரைவர் சங்கத்திற்கு அருகாமையில் குப்பைத் தொட்டியில் குப்பைகள் அகற்றாமலும் குப்பைத் தொட்டிற்கு கீழ் அதிக குப்பைகள் கிடப்பதாலும் மக்கள் முகம் சுளித்து அவ்வழியில் தினம் தினம் நாட்களை கடந்து செல்கின்றனர். பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் அதிகமாக இந்த இடத்திற்கு வருவதால் அவர்களும் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது இதை முள்ளிகூர் பஞ்சாயத்து நிர்வாகம் உடனடியாக கருத்தில் கொண்டு இந்த இடத்தினை உடனடியாக சுத்தம் செய்து தருமாறு எமரால்டு வாகன ஓட்டுனர் நல சங்கம் மற்றும் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் சார்பாகவும்வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment