நீலகிரி மாவட்டம் உபதலை அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் வானவில் மன்றத்தின் சார்பாக சிறப்பு கருத்தரங்குகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் ஐயா நின் ரெஜி மற்றும் தலைமை ஆசிரியை பொறுப்பு திருமதி. உஷா தேவி ஆகியோர் தலைமை வகித்தார்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளரும் வானவில் மன்ற மாநில கருத்தாளருமான ஓய்வு பெற்ற ஆசிரியர்திரு. கே .ஜே. ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு.கே.ஜே. ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய போது கூறிய கருத்துக்கள்..... மனித மூளை என்பது ஒரு அற்புதமான சூப்பர் கம்ப்யூட்டர் என்று கூறுவார்கள் மனித மூளையில் ஒரு கோடி செல்கள் உள்ளன மேலும் 10 ஆயிரம் கோடி நியூரான்கள் உள்ளன ஒவ்வொரு நியூரானும் ஆயிரம் நியூரான்களோடு இணைப்பில் உள்ளது ஒவ்வொரு நியூரான்களுக்கு இடையிலேயும் மூன்று புள்ளி ஐந்து எலக்ட்ரான் வோல்ட் மின்சாரம் பாய்வதாக அறிவியல் கண்டறிந்துள்ளது மேலும் ஒவ்வொரு நியூரான்களுக்கு இடையிலேயும் வேதிப் பொருட்களின் தொடர்பு உள்ளது நமது மனித மூளையின் செயல்ப செயல்பாடுகள் அனைத்தையும் ஒரு கணித சூத்திரத்தின் மூலம் ஒரு கணித மேதை வடிவமைத்துள்ளார்.
மூளை தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை அது செயல்படும் விதம் பற்றிய கணித வடிவ கணித வழிமுறைகளை கணித்துள்ளார். இதன் அடிப்படையில் தான் நவீன ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட் எனப்படும் செயற்கை நுண்ணறிவு துறை செயல்படுகிறது மூளையின் உடைய ஒரு மாதிரியை ஆதாரமாகக் கொண்டுதான் செயற்கை நுண்ணறிவு செயல்படுகிறது நமது மனமும் மூளையினுடைய ஒரு பகுதி தான் மூளையின் நியூரான்களுக்கு இடையே பாயும் மின்சாரத்தையும் என் சைன்கள் என்ற வேதிப்பொருட்களையும் கட்டுப்படுத்துவதன் மூலம் மூளை மற்றும் மனதின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தலாம் என நவீன அறிவியல் கண்டுபிடித்துள்ளது எலான் மஸ்க் என்ற பிரபல தொழிலதிபர் அமைத்துள்ள ஆய்வு நிறுவனம் ஸ்கீசோ பெர்னியா எனப்படும் நோயினால் பாதிக்கப்பட்ட முதியவர்களில் மூளையின் செயல்பாடுகளை சிலிக்கான் துகள்கள் கொண்டு கட்டுப்படுத்தலாம் என்று கண்டறிந்து அதனை செயல்படுத்தி வருகிறது அதுபோல குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை செயற்கையாக உருவாக்கப்பட்ட தாயின் கருவறையில் வைத்து குழந்தை பத்து மாசம் வரை இயல்பாக பிறக்கும் வழி வகைகளையும் அறிவியல் கண்டறிந்துள்ளது.
தற்காலத்தில் பொருளாதாரம் என்பது அறிவு சார்ந்த ஒரு துறையாகவே உள்ளது மனித குல வரலாற்றில் மூளை உழைப்பை பயன்படுத்துபவர்கள் எல்லாம் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் உடல் உழைப்பை கொடுப்பவர்கள் எல்லாம் அடிமைகள் ஆகவும் இருந்துள்ளனர் என்று அறிகிறோம் இன்றைய நவீன யுகத்திலும் மூளையை பயன்படுத்துவர்களிடம் தான் செல்வம் குவிகிறது என்பதை நாம் காண்கிறோம் உடல் உழைப்பிற்கு உரிய சம்பளம் கிடைப்பதில்லை மூளையின் செயல்பாடுகளை கூர்மைப்படுத்த பல வழிமுறைகள் உள்ளன அவற்றில் முக்கியமானது கணித பயிற்சியே ஆகும் மாணவர்கள் கணிதத்தை ஆர்வத்துடன் கற்றுக் கொள்வதின் மூலம் தங்கள் மூளையை மூளையின் செயல்பாடுகளை கூர்மை படுத்தலாம் மாணவர்கள் தங்கள் அறிவுத்திறனை பெருக்கிக் கொண்டால் செல்வமும் பதவிகளும் நம்மைத் தேடி வரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற பல கருத்துக்களை கூறிய ஆசிரியர் திரு. ராஜு அவர்கள் மூளையை கூர்மைப்படுத்துவதற்கான பயிற்சிகளையும் மாணவர்களுக்கு அளித்தார்.
முன்னதாக ஆசிரியர் திரு. பிரகாசம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார் ஆசிரியை சௌந்தர்யா அவர்கள் நன்றி கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment