நீலகிரி மாவட்டம் கூடலூர் தாசில்தார் ராஜேஸ்வரி மீது பல்வேறு தரப்பிலிருந்தும் பொதுமக்கள் தொடர்ந்து லஞ்சப் புகாரை எழுப்பி வந்தனர்.
தொடர்ந்து ஒவ்வொரு சான்றிற்கும் 25,000 மற்றும் 50,000 என வாங்குவதாக புகார் வந்து கொண்டிருந்து.
இந்நிலையில் கூடலூரில் உள்ள ஒரு பெண்மணியிடமிருந்து நில உட்பிரிவு செய்து கொடுப்பதற்காக ஒரு லட்சம் ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. இறுதியில் 20 ஆயிரம் தருவதாக பேரம் பேசி அந்த தொகை பெறும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment