தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சார்பில் மாவட்டம் தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தொடர் நிகழ்ச்சி இன்று குன்னூர் காந்திபுரம் அரசினர் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளரும் நீலகிரி நற்பணி மையத்தின் தலைவருமான திரு கன்டோன்மெண்ட் வினோத்குமார் தலைமை தாங்கினார் , கூட்டமைப்பின் குன்னூர் நகர ஒருங்கிணைப்பாளரும் அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளையின் தலைவருமான திரு. சாதிக் அனைவரையும் வரவேற்றார் , காவல் துறையினர்,ஜே சி ஐ குன்னூர் ஹில்ஸ் ஸ்பார்க்ஸ் தலைவர் திரு விஜயகாந்த் முத்துகிருஷ்ணன், த்ரீ ஸ்டார் அறக்கட்டளை நிர்வாகிகள்,ஆல்ககாலிஸ் திரு.பாபு, கலந்துகொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினர். நீலகிரியின் மாயக் குரல் மோகன்ராஜ் போபியோ அறக்கட்டளையின் தலைவர் அவர்களின் பொம்மை நாடகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது, ரோட்டரி குன்னூர், ஜே.சி. ஐ. குன்னூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர் கூட்டமைப்பின் இளைஞர் அணி செயலாளரும், திகழ் அறக்கட்டளை தலைவருமான கோவர்த்தனன் ராமசாமி நன்றியுரை ஆற்றினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாக தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு....
No comments:
Post a Comment