கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் முப்பெரும் விழா. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 12 July 2024

கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் முப்பெரும் விழா.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி இணைந்து நடத்திய அன்பு மேடை விரிவாக்கம் துவக்க விழா, விருதுகள் வழங்கும் விழா, மற்றும் போதையால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு விழா என முப்பெரும் விழா கோத்தகிரி பேருந்து நிலையம் முன்புறம் உள்ள கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் பராமரிக்கும் அன்புமேடை பகுதியில் 12.7.2024 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு துவங்கியது.

 விரிவுபடுத்தப்பட்ட அன்புமேடை திறப்புவிழா நடத்தப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது.


கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.மு. பாலகிருஷ்ணன் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.

கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் திரு.T.P.K. நாகேந்திரன் அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார் தங்கள் சங்கம் பொதுமக்களிடம் மற்றும் யாரிடமும் நன்கொடை பெறாமல் தாங்கள் செய்யும் அனைத்து உதவிகளும் கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க உறுப்பினர்களின் சொந்த பங்களிப்பால் மட்டுமே செய்யப்படுகிறது என்று கூறியது பலத்த கை தட்டலையும் பாராட்டுக்களையும் பெற்று அனைவரையும் வியப்படைய வைத்தது.

உதகை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.செளந்தர்ராஜன் அவர்கள் போதையால் ஏற்படும் பாதிப்புகள், நடக்கும் குற்றங்களுக்கும் காவல் உதவிக்கும் உள்ள தொலைபேசி எண்கள் பற்றி விவரித்து இளைய சமுதாயம் நல்லொழுக்கத்துடன் செயல்பட அறிவுறை வழங்கினார். காவல் துணை கண்காணிப்பாளர் குன்னூர் திரு. குமார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். 


கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் திருமதி.ஜெயக்குமாரி அவர்கள் உரையில் பேரூராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டியதை கூறினார்.திரு. லியாகத் அலி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

சிறப்பாக பணியாற்றும் கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கும், பத்திரிக்கை நிருபர்கள், சிட்டி குழுமம், முன்னிலை மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு சேவை விருதுகள் வழங்கப்பட்டது.


கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க உறுப்பினர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் துணைத்தலைவர் திரு. S. சுந்தர்ராஜ் அவர்கள் நன்றி உரையாற்றினார். நாட்டுப்பண் பாடப்பட்டு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.


அனைவருக்கும் தேனீர் விருந்து வழங்கப்பட்டது.இந்த முப்பெரும் விழாவில் கோத்தகிரி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad