நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் அடிக்கடி வன விலங்கு மோதல்களும்,விவசாய விளை நிலங்கள் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.யானை மற்றும் வனவிலங்குகளிடமிருந்து மக்களை பாதுகாக்க வனத்துறையும்,தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும்,வன விலங்குகளால் உயிர் பாதிப்பு ஏற்படும் பொழுது அக்குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என வழியுறுத்தி சிபிஎம் கட்சி சார்பாக கூடலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்
கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment