நடுவட்டத்தில் அறிவியல் கருத்தரங்கு நடைபெற்றது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 6 July 2024

நடுவட்டத்தில் அறிவியல் கருத்தரங்கு நடைபெற்றது.


 நீலகிரி மாவட்டத்தில் நடுவட்டம் அரசு உயர்நிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பாக அறிவியல் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. சகுந்தலா அவர்கள் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு. கே. ஜே.ராஜு (NTC நிறுவனர்)  அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் அவர் தம் உரையின் போது கூறிய கருத்துக்கள்.....



முன்பு அறிவியலால் நன்மையா தீமையா என்று பட்டிமன்றங்கள் எல்லாம் பரவலாக நடைபெற்றது அறிவியலால் ஏற்படும் நன்மை தீமைகள் என்பவை அதை பயன்படுத்தும் மக்களின் மனோபாவத்தை பொறுத்து அமையும் என்பதுதான் உண்மை தற்காலத்தில் பெரும்பான்மையான அரசுகள் ராணுவத்திற்கு மட்டுமே அறிவியலாளர்களை பயன்படுத்துகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டும் உண்டு உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த அறிவியல் உண்மையை அணுகுண்டு உற்பத்திக்கு பயன்படுத்தியது அரசியல்வாதிகளே அதுபோலத்தான் நவீன அணுகுண்டுகளான பிளாஸ்டிக் க்கும் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய மக்கள் தங்கள்  பேனா பில்லியாட்ஸ் பந்துகள் சிகரெட் ஆஸ்ட்ரே போன்ற பல பொருட்களை உற்பத்தி செய்ய யானை தந்தங்களையே பயன்படுத்தினர் இதற்காக 30 ஆண்டுகளில் 50 லட்சம் யானைகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது  1862 இல் அலெக்சாண்டர்  பார்ஸ் என்ற அறிவியல் அறிஞர் பருத்தி இழைகளையும் தாவர எண்ணெயும் சேர்த்து பார்க்கின் சைன் என்ற பாலிமரை உருவாக்கினார் பிறகு 1907-ல் லியோ பாக் லேண்ட்  என்ற வேதியியலாளர் பீனால் மற்றும் பார்மால்டி ஹைடு  இரண்டையும் இணைத்து இன்றைய பிளாஸ்டிக்கை கண்டுபிடித்தார் அன்றைய தினத்தில் நெகிழிகள் யானைகளை காக்கும் வரமாகவும் மனிதர்களுக்கு மிகவும் பயன்படக்கூடியதாகவும் இருந்தது இருபதாம் நூற்றாண்டில் துவங்கிய இந்த பிளாஸ்டிக் யுகம் இன்று பூமித்தாயின் சுவாசக் குழாயை அடைத்துக் கொண்டிருக்கிறது பூமியின் மேற்பர மேற்பரப்பில் 40 சதவீதம் பிளாஸ்டிக்குகளால் நிரம்பியுள்ளது சமுத்திரங்களில் 40% மேற்பரப்பில் பிளாஸ்டிக்கில் மிதந்து கொண்டிருப்பதாகவும் ஆங்காங்கே பிளாஸ்டிக் தீவுகள் உருவாகியுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர் இந்த பிளாஸ்டிக்குகள் சூரிய வெப்பத்தாலும் புற ஊதா கதிர்களாலும் சிதைவடைந்து மைக்ரோ பிளாஸ்டிக் என்ற நச்சுப் பொருளாகி இன்று தாய்ப்பாலில் கூட கலந்துள்ளது குரங்கு போன்ற விலங்குகளுக்கு அவைகள் இயற்கையாக உணவு தேடும்  பண்பை மாற்றி அமைத்தது மனிதர்கள் தான்.  


அதுபோல மனிதர்களின் உடைய இந்த பிளாஸ்டிக் பயன்பாட்டை ஊக்குவித்தது பன்னாட்டு வியாபார நிறுவனங்கள் தான் தங்களுடைய லாப வெறியை பெருக்கிக் கொள்வதற்காக தான் மக்களை பிளாஸ்டிக் பயன்படுத்தும் மந்தைகளாக மாற்றி விட்டார்கள் இப்பொழுது பிளாஸ்டிக் ஒழிக்க வேண்டும் என்று பரவலாக குரல் கொடுத்துக் கொண்டிருந்தாலும் மக்கள் அதற்கு செவி சாய்ப்பதாக இல்லை பிளாஸ்டிக் ஒழிப்பதற்கு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஒருமுறை மட்டுமே பயன்படக்கூடிய பிளாஸ்டிக்கை தவிர்ப்பதன் மூலம் சுற்றுச் சூழலில் பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கலாம் ஆனால் அதை பன்னாட்டு வியாபார நிறுவனங்கள் விரும்ப மாட்டார்கள் மக்களுக்கும் இது குறித்து எந்தவிதமான விழிப்புணர்வும் இல்லை என்பது வருந்தத்தக்கது.


 உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து இந்த பன்னாட்டு வியாபார நிறுவனங்களுக்கு எதிராக தடை விதித்தால் மட்டுமே பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க முடியும் சில ஆண்டுகளுக்கு முன்பு கொக்கோகோலா நிறுவனம் ஒரு வருடத்திற்கு சராசரியாக 11 லட்சத்து 500 கோடி பாட்டில்களை உற்பத்தி செய்தது என ஒரு ஆய்வு கூறுகிறது மேலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் பேக்கேஜ் எனப்படும் மேலுரைகள் தயாரிப்பதில் அதிகமான பிளாஸ்டிக் பொருள்கள் கழிவுகளாக மாறுகிறது பிளாஸ்டிக்குகள் நம்மை மூழ்கடிக்கும் முன் நாம் அதனை நம்  கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் அதற்கு மக்கள் விழிப்புணர்வு பெற்றால் தான் வழி உண்டு என்பதனைப் போன்ற பல கருத்துக்களை கூறினார்.

 முன்னதாக ஆசிரியர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியை ஸ்ரீ வெள்ள நன்றி கூறினார்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K A  கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad