நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ளது காடடேரி பூங்கா இயற்கை எழில் கொஞ்சும் மலை காட்சிகள் புல்வெளிகள் ஆகியவை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர்மக்களுக்கும் பிடித்தமான சுற்றுலா தலமாகும்.
இந்ந பூங்காவிற்க்கு பார்வையாளர்கள் வராமல் வெறிச்சோடியது மாவட்ட நிர்வாகம் பூங்காவை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் முதலில் கட்டணமின்றியும் சிறிது காலத்திற்க்குபிறது சிறிய அளவு கட்டணத்துடனும் பார்வையாளர்களை வரவழைத்தது.
மேலும் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரும் மலை ரயில் காட்டேரி பூங்காவில் நின்று சுற்றுலாபயணிகள் சிறிது நேரம் பூங்காவை ரசித்துவிட்டு வந்த பின் புறப்பட்டுச் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்தது.
புதிதாக திருமணமான தம்பதிகள் போட்டோகிராபர் மற்றும் வீடியோ கிராபர்களுடன் வந்து போட்டோஷூட் நடத்த இந்தபூங்காவை தேர்ந்தெடுப்பது வாடிக்கை.
உள்ளூர் மட்டுமின்றி சமவெளி பகுதிமக்களும் போட்டோஷூட் நடத்தவருவார்கள்.
இந்த நிலையில் நுழைவு கட்டணம் உயர்வு மற்றும் போட்டோஷூட் நடத்த ரூபாய் 5000 என கட்டணம் உயர்த்தி வைக்கப்பட்டுள்ள அறிவிப்புபலகையால் போட்டோஷூட் நடத்த வருபவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழைய கட்டண முறையையே பின்பற்றினால் அதிக அளவு போட்டோஷூட்கள் நடக்கும் என்றும் இப்படி பல மடங்கு கட்டணம் உயர்த்தினால் காட்டேரி பூங்காவிற்க்கு யாரும்வராமல் மற்ற இடத்திற்கு சென்றுவிடுவர். மறுபடியும் பழையபடி பூங்கா வெறிச்சோடி விடும் என பொதுமக்களும் போட்டோஷூட் நடத்தும் ஸ்டுடியோ உரிமையாளர்களும் ஆதங்கப்பட்டு கருத்து தெரிவித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment