கோத்தகிரி கெச்சிகட்டி - சிறுத்தை புலி குட்டியுடன் டேரா. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 6 July 2024

கோத்தகிரி கெச்சிகட்டி - சிறுத்தை புலி குட்டியுடன் டேரா.



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கெச்சிகட்டி முதல் கைகாட்டி செல்லும் சாலையில் மானியாடா பேக்டரி அருகில் உள்ள புதர் பகுதியில் சிறுத்தை புலிக்குட்டி இருந்தது இன்று காலை நடைபயிற்சி சென்றவர்கள் கண்களில் பட்டுள்ளது.


ஏற்கனவே கெச்சகட்டி பகுதியில் சிறுத்தை தொடர்ந்து உலாவருவதாகவும் அங்கேயே டேரா எனவும் ஒரு வீட்டில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை பதிவிட்டு தமிழக குரல் செய்திதளத்தில் செய்திவெளியிட்டு ஜாக்கிரதை என பொதுமக்களை எச்சரித்தோம். பல செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு அலுத்து விட்டன.


இன்று சிறுத்தை குட்டி தென்பட்டது சிறுத்தை அங்கேயே இருப்பதை உறுதிசெய்துள்ளது. இனியும் தாமதிக்காமல் வனத்துறை போர்க்கால அடிப்படையில் செயற்பட்டு ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க தமிழக குரல் செய்தி நிறுவனத்தின் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மற்றும் நடை பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள்,கெச்சிகட்டி,பனக்கம்பை,அளியூர், ஜக்கலோடை பகுதி மக்களும்மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad