நீலகிரி மாவட்டத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை 1899 ஆம் ஆண்டு தனது முதல் பயணத்தை துவங்கியது. மலைப்பிரதேசம் என்பது இயற்கையின் அழகு மலைகளின் மடிப்புகளின் வழியே ரயில் மூலம் கண்டுகளிப்பது பேரானந்த அனுபவமாக இருக்கும் நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எல்லோரும் நிச்சயம் சுற்றி பார்க்க வேண்டும் என ஆசைப்படுவது மலை ரயில் வழியாக மலைகளின் பச்சை பசேல் அழகை ரசிப்பது தான்.
ஆசியாவில் தற்போதும் பல் சக்கரங்களில் இயங்கும். ஒரே மலை ரயில் நீலகிரி மலை ரயிலே ஆகும். மழை ரயில் பாதையின் 28 வளைவுகளில் வழியாக வளைந்தும் நெளிந்தும் குகைகளுக்குள் புகுந்தும் வெளியேறி 250 பாலங்களைக் கடந்து ஒரு மணி நேரம் பயணம் செய்கிறது இந்த மலை ரயில் முதல் முறையாக குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் இயக்கப்பட்டது. குன்னூர் ரயில்வே கம்பெனி துவங்கினர்கள் ஆனால் போதிய நிதி கிடைக்காததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது பின்னர் 1899 ஆம் ஆண்டில் நீலகிரி மலையில் கம்பெனி பல்சக்கரங்களால் ஆன தண்டவாளம் அமைத்து குன்னூர் வரை அமைக்கப்பட்டு நீராவி இன்ஜின் மூலம் 1899 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி தனது முதல் பயணத்தை தொடங்கியது. இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா டர்பன் நகரில் நடந்த உலக பாரம்பரிய சங்க கூட்டத்தில் நீலகிரி மலை ரயில்களுக்கு பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்து 2005 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி இதற்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டது மேலும் யுனெஸ்கோ அந்தஸ்து கிடைத்து 19 ஆண்டு காலம் நிறைவடைந்து நேற்று இருபதாவது ஆண்டு துவங்கியதை அடுத்து குன்னூர் ரயில் நிலையத்தில் சமூக அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டு இங்கு வந்த சுற்றுலா பயணிகள் மத்தியில் மலை ரயில் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு இனிப்புகளும் வழங்கி உற்சாகப்படுத்தினர். விழாவில் நீலகிரி மலை ரயில் பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகி நடராஜ் குன்னூர் வியாபாரிகள் சங்க செயலாளர் ரஹீம் தன்னார்வலர் வினோத் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment