காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யும் பணியில் அமைச்சர் கா. ராமச்சந்திரன் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 16 July 2024

காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யும் பணியில் அமைச்சர் கா. ராமச்சந்திரன்

     


     நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியம் மேலூர் ஊராட்சி உட்லாண்ட்ஸ் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் சுற்றுலாத் துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவினை வழங்கி அவர்களுடன் உணவு அருந்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மு அருணா முன்னிலை வகித்தார். 


அதனைத் தொடர்ந்து உட்லாண்ட்ஸ் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் குன்னூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 248 ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் அடையாளமாக 10 ஆசிரியர்களுக்கு கையடக்க கணினிகளையும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பாக 43 மாணாக்கர்களுக்கு விலை இல்லா மழைக்கோட்டையும் கம்பளி சட்டை மழைக்கால காலனி செருப்பு ஆகியவற்றையும் வழங்கும் அடையாளமாக ஆறு மாணாக்கர்களுக்கு வழங்கினார். மேலும் சுற்றுலாத்துறை அமைச்சர் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு தலா ரூபாய் 3.53 இலட்சம் மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவு ஆணையினையும் வழங்கினார். நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி கௌசிக் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன் தோஸ் மகளிர் திட்ட இயக்குனர் காசிநாதன் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா நேரு உதவி திட்ட அலுவலர்கள் அருண் விஜயகுமார் குன்னூர் வட்டாட்சியர் கனிசுந்தரம் குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி மேலூர் ஊராட்சி தலைவர் ரேணுகாதேவி பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் வட்டார மேலாளர்கள் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad