கீழ்-கோத்தகிரியில் நீலகிரி காவல்துறையின் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
நீலகிரி மாவட்டம் சோலூர்மட்டம் காவல்எல்லைக்கு உட்பட்ட கீழ்-கோத்தகிரி சமூதாய கூடத்தில் காவல்துறையின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோத்தகிரி காவல் ஆய்வாளர் திரு. ஜெயமுருகன் அவர்கள் தலைமையிலும் குன்னூர் டிஎஸ்பி திரு. குமார் அவர்கள் முன்னிலையிலும் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுந்தரவடிவேலு அவர்கள் பொதுமக்கள் எவ்வாறு பாதுகாப்புடன் இருப்பது காவல்துறையின் உதவிகள் மற்றும் உதவி எண்கள் ஆகியவை பற்றி விவரித்து கூறினார். பொதுமக்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்ததுடன் சந்தேகங்களையும் கேட்டு தெரிந்து கொண்டார்கள்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளர் திரு.யாதவகிருஷ்ணன் திரு.ஆனந்த் மற்றும் காவலர்கள் வியாபாரிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K..A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment