நீலகிரி மாவட்டம் முதுமலை வளிமண்டல வனப்பகுதியை ஒட்டி உள்ள மசினகுடி ஊராட்சி தேவர் சோலை பேரூராட்சி மற்றும் முதுமலை ஊராட்சி ஆகிய வனத்தை ஒட்டியுள்ள பழங்குடியின கிராமமான முதுகுளி நாகம்பள்ளி நெல்லிக்கரை மண்டைக்கரை மச்சிக்கொல்லி செம்பக்கொல்லி மற்றும் முதுமலை ஊராட்சி பகுதி மசினகுடி ஊராட்சி போன்ற முதுமலை வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் இதர சமுதாயத்தினர் முதுமலை வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் பல நூற்றாண்டு காலங்களாக பரம்பரை பரம்பரையாக கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பக உள் மண்டல வெளிமண்டல எல்லையோரம் உள்ள பல வகையான பழங்குடியின மக்கள் வன உரிமை சட்டம் என்ற பெயரில் வன உரிமை சட்டத்திற்கு மாறாக அவர்களின் குடும்பங்கள் சட்டவிரோதமாக சில வருடங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டுள்ளனர். அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக அரசு இவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த மறுவாழ்வுக்காக நிவாரணம் வழங்க இவர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத்தில் வனத்துறையினர் மற்றும் வனத்துறையினராலும் வருவாய்த்துறையினராலும் இடைப்பட்ட ஒரு ஆணாக வைத்திருந்த வழக்கறிஞர் மற்றும் நில புரோக்கர்கள் முறைகேடுகள் செய்து ஏமாற்றியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட பழங்குடியினர்களுக்கும் மறு குடிமை மறுவாழ்வு சட்டப்படி முறையாக ஏற்படுத்தப்படாமல் அவசர நிலையில் வீடுகள் கட்டிக் கொடுத்து அந்த வீடுகளுக்கு முன் இணைப்பு இல்லாமல் குடிநீர் இல்லாமல் போதை வசதிகள் எதுவுமே இல்லாமல் தற்போது பெய்த மழைக்கு வீட்டிற்குள் குடியிருக்க முடியாத நிலையில் தற்போது வீடுகள் ஒழுகி குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியில் உள்ளவர்களும் மற்றும் பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்த அனைத்து சங்கங்களும் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
மற்றும் ஏற்கனவே இப்பகுதியில் இருந்து மறுவாழ்வுக்காக வெளியேற்றப்பட்டவர்களுக்கும் வெளியேற்றப்படாமல் இன்னும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கும் மற்றும் கூடலூர் பந்தலூர் பகுதியில் உள்ள பழங்குடியினர் காலனிகளுக்கு சில வருடங்களாக முறையான குடியிருப்பு குடிநீர் மின்சாரம் சாலை வசதி மருத்துவ வசதி பள்ளி வசதியின்றியும் மற்றும் அரசினால் வழங்கப்படும் நிவாரணங்கள் என எதுவும் இன்றுவரை அப்பகுதி பழங்குடியின மக்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அரசால் இயற்றப்பட்டுள்ள அங்கீகார சட்டம் 2006 வழங்கியுள்ள உரிமைகளை கடந்த 18 ஆண்டுகளாக அமல்படுத்தப்படாமல் அப்பகுதி பழங்குடியின மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பல முறையீடுகள் மத்திய மாநில அரசிற்கு பலமுறை கோரிக்கை வைத்தும் தொடர்ந்து கண்டுகொள்ளாமல் மத்திய மாநில அரசுகள் மெத்தனம் காட்டி வந்ததால் கடந்த 2023 டிசம்பர் 11 ஆம் தேதி கூடலூர் மத்திய பகுதியில் உள்ள காந்தி மைதானத்தில் மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தி அரசின் கவனத்திற்கு கோரிக்கைகளை அனுப்பி வைத்தனர்.
இருந்த போதும் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு எந்த ஒரு விசாரணை நடவடிக்கை எதுவும் இல்லாததால் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யங் கொல்லி குந்தலாடி பிதர்காடு மற்றும் அதை சுற்றியுள்ள பல பழங்குடியின மக்களுக்கும் மறுவாழ்வு மூலம் குடியிருக்கும் பழங்குடியின இன்றுவரை ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பழங்குடியின மக்கள் ஒன்றிணைந்து இன்று பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பிதற்காடு பஜார் பகுதியில் மிகப்பெரிய அளவில் அனைத்து பழங்குடி மக்களும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தி வருகின்றனர் மத்திய மாநில அரசுகள் உடனடியாக செவி சாய்த்து இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மறுபடியும் அமர்த்திய பழங்குடியின மக்களுக்காக உயர் அதிகாரிகள் தலைமையில் ஒரு குழு அமைத்து இந்த பழங்குடி இன மக்களின் கோரிக்கையை ஏற்று ஒரு குழு அமைத்து மறுபடி அமர்த்திய பழங்குடி மக்களுக்கு எதிராக அவர்களுக்கு எந்த அதிகாரிகள் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இந்த பழங்குடி இன மக்களுக்கு தேவையான கிடைக்க பெற வேண்டிய அனைத்து உரிமைகளையும் பெற்று தர வேண்டும் என்பதே அப்பழங்குடியின மக்களின் கோரிக்கை. இந்நிலையில் அங்கு வந்த கூடலூர் கோட்டாட்சியர் பந்தலூர் வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பழங்குடியின மக்களிடம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment