நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதில் காட்டு யானை காட்டெருமை சிறுத்தை கரடி உள்ளிட்டவை இரவு மட்டுமல்லாமல் பகல் நேரத்திலேயும் நடமாடி வருவதால் நகரவாசிகள் மட்டுமல்லாமல் கிராம புற பொது மக்களும் தேயிலை தொழிலாளர்களும் அச்சத்தினால் வீடுகளுக்குள்ளேயே முடங்கி போய் வருகின்றனர். இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள கரிமரா ஹட்டி கிராமத்தில் நேற்று குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள குடிநீர் தொட்டி அருகே சிறுத்தை ஒய்யாரமாக அமர்ந்து கொண்டும் அங்கும் இங்கும் உலா வந்ததால் இப்பகுதி மக்கள் அச்சத்தில் பீதி அடைந்தனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் சிறுத்தை தாமாகவே அருகே உள்ள வனத்திற்குள் புகுந்தது இதே பகுதியில் தோட்டத்தில் முகாமிட்டு இருந்த கரடி நீண்ட நேரம் அலைந்து திரிந்தது. பின்னர் சிறிது நேரம் அருகே உள்ள மரத்தில் சாய்ந்து இரண்டு கைகளையும் உயர்த்தி மக்கள் நடமாட்டம் குறித்து நோட்டமிட்டது இதனால் இப்பகுதியில் தொழிலார்களும் பொதுமக்களும் செல்லாமல் தொடர்ந்து கரடியை கண்காணித்து வந்தனர் பின்னர் ஒருவழியாக கரடி அங்கே இருந்த தேயிலைத் தோட்ட பகுதிக்குள் புகுந்து சென்றது.
இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் இரண்டு வனக் குழுவினர் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பரவலான மழை பெய்து வருவதால் முட்புதர்கள் மற்றும் தோட்ட பகுதியில் கரடி மற்றும் சிறுத்தை ஓய்வெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது எனவே பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் உடனடியாக இந்த வனவிலங்குகளை கண்டு கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment