நீலகிரி மாவட்டம் பெட்டட்டி சுங்கம் பகுதியில் உழவர் சந்தை அமைக்க புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
வெகுநாட்களாக திறப்பு விழா நடத்தாமல் பயன்பாடு இன்றி கிடக்கும் இந்த கட்டிடம் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சுற்றுலா துறை அமைச்சரின் வீடும் பெட்டட்டி சுங்கம் பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆகவே உடனடியாக திறப்பு விழா நடத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவர விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment