உதகை நகராட்சியை மாநகராட்சியாக மாற்றக்கூடாது என்று பொதுமக்கள் சேர்ந்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 10 July 2024

உதகை நகராட்சியை மாநகராட்சியாக மாற்றக்கூடாது என்று பொதுமக்கள் சேர்ந்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


நீலகிரி மாவட்டம் இத்தலார் என்னும் கிராமத்தில் உதகை நகராட்சியை மாநகராட்சியாக மாற்றக்கூடாது என்று உண்ணாவிரத மற்றும் கடை அடைப்பு ஆர்ப்பாட்டம் 10/07/2024 இன்று நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட இத்தலார் போர்த்தி பெம்பட்டி இந்திரா நகர் பேலிதலா புதுஹட்டி  நுந்தளா போர்த்தி ஆடா சுரேந்திர நகர் பெரியார் நகர் கரிகல்வலை வ உ சி நகர் கோத்த கண்டி ஒசஹட்டி பழைய அட்டு பாயில் துளிதலை டி. காந்திநகர் காந்திபுதூர் வினோபஜிநகர் ஸ்ரீராம் நகர் மற்றும் இதர சிற்றூர் சிற்றூர் பகுதியில் உள்ளன மொத்தம் 36 கிராமங்களை சேர்த்து 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது ஆல வாத்தியார் (போராட்டக் குழு தலைவர்) தலைமையில் நடைபெற்றது இதில் வரவேற்புரை இத்தலாரை சேர்ந்த விஸ்வநாதன் அவர்கள் உரையாற்றினார் மற்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் நாக்கு பெட்டா தலைவர் மணிவண்ணன் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்  மற்றும் நாட்டாமை மணி சுரேந்திர நகர் அர்ஜுனன் பெம்பட்டி பெரியார் நகர் சங்கர் அப்புக்கோடு நடராஜன் இந்திரா நகர் கணேசன் ராமஜெயம் கண்ணன் கல்லக்கொரை போஜன் நுந்தளா ராமச்சந்திரன் கரிகாடு மந்து தேவராஜ் என பலர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சியை மாநகராட்சி உடன் இணைப்பதால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி இவர்கள் அறிவித்தனர். அவர்கள் அறிவித்தவை என்னவென்றால் பூர்வகுடி மக்களின் வாழ்க்கை முறை பாதிக்கப்படுகிறது பழங்குடியினர் வாழ்விடம் வாழ்க்கை முறை பாதிக்கப்படுகிறது தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமாக உள்ள இப்பகுதியில் இம்மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது இப்பகுதி நீலகிரி மாவட்டத்தின் உயிர் சூழலுக்கு மைய கருவாக இருப்பதால் உயிர்ச் சூழல் பாதிக்கப்படுகிறது.

இப்பகுதியில் உள்ள அழிவின் விளிம்பில் உள்ள பாதுகாக்கபட்டு இருக்கும் தாவரங்களும் விலங்குகளும் பாதிக்கப்படுகிறது இப்பகுதி முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி இருக்கின்ற காரணத்தினால் விவசாயம் பாதிப்படைகிறது இப்பகுதியில் கால்நடைகள் அதிகமாக இருக்கின்ற  காரணத்தினால் விவசாயம் பாதிக்கப்படுகிறது இப்பகுதியில் பெரும்பாலான கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் பாதிக்கப்படுகிறது குடியிருப்புக்களுக்கான வீட்டு வரி கட்ட முடியாமல் அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது குடிநீருக்கான வரி கட்ட வாய்ப்பு ஏற்படுகிறது சிற்றூர்களில் இருந்து சிறுசிறு அலுவல் சார்ந்த பணிகளுக்கு உதகை மாநகருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது உயர் அலுவலர்களை தொடர்பு கொள்வது எட்டா கனியாக மாறுகிறது பஞ்சாயத்து ராஜ் என்ற தூய்மையான திட்டம் பாதிப்படைகிறது அதிகாரம் பரவலாகுதல் என்ற முறையானது மாறி மீண்டும் அதிகாரம் மையப்படுத்தப்படுகிறது புதிதாக வீடுகள் கட்டுவதற்கோ நிலங்கள் வாங்குவதற்கோ நிலங்களை விற்பதற்கோ கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி பெறுவதற்கு சிரமமாய் இருக்கும். 

இவை மட்டுமின்றி இல்லாமல் மக்கள் பங்கேற்கும் மக்கள் கேள்வி எழுப்பும் மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் இடமான கிராம சபை இல்லாமல் போகும் கிராம சபை தீர்மானம் மூலம் நமது ஊருக்கான திட்டங்களை நாமே முடிவு செய்வது திட்ட பயனாளிகளை நாமே தேர்ந்தெடுப்பது போன்ற நிலை மாறி அனைத்திற்கும் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி மன்ற தீர்மானத்தை எதிர்பார்க்க வேண்டிய நிலை ஏற்படும் தண்ணீர் பிரச்சனை சாக்கடை பிரச்சனை போன்ற அடிப்படை பிரச்சனைகளுக்கு கூட நமது ஊரிலேயே இருக்கும் ஊராட்சி அலுவலகத்தை விட்டு வெகு தூரம் உள்ள மாநகராட்சி அலுவலகத்தை அணுக வேண்டிய நிலை ஏற்படும் அனைத்து ஊராட்சிகளின் அதிகாரம் ஓரிடத்தில் இருப்பதால் அதாவது ஒரு மாநகராட்சி அலுவலகத்தில் கொடுக்கும் ஆவணங்கள் குவிவதால் லஞ்சம் ஊழல் போன்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. என அவர்கள் பலவிதமான அறிவிப்புகளை தெரிவித்தனர். மக்களுக்கு இந்த நிலை ஏற்படக் கூடாது என்றால் நகராட்சியை மாநகராட்சியாக மாற்றக்கூடாது என்று அவர்கள் கூறினார்கள். அரசு நகராட்சி மாநகராட்சியாக மாற்றிவிட்டால் ஏழைகளின் வாழ்வாதாரங்கள் சீர்கேடு ஆகும் மற்றும் மக்களுக்கு தான் இது பாதிப்பு ஏற்படும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் இவர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் நன்றியுரை லட்சுமணன் அவர்கள் கூறினார்..


 இந்த ஆர்ப்பாட்ட மூலம் நகராட்சி மாநகராட்சியாக மாற்றக்கூடாது என்று 36 கிராமங்களும் கோரிக்கை விடுத்து இறுதியில் அனைவரும் எழுந்து நின்று கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தனர்..இந்த ஆர்ப்பாட்டத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்கு காவல்துறை சார்பாக இன்ஸ்பெக்டர் திருமதி முத்துமாரியம்மாள் ரூரல் டிஎஸ்பி திருமதி விஜயலட்சுமி   சிறப்பு பிரிவு அதிகாரி திரு அப்பாஸ் அவர்களுடன் மற்ற காவல்துறை நண்பர்களும் உடனிருந்து இந்த ஆர்ப்பாட்டத்தை குறித்த நேரத்திற்குள் முடித்துக் கொடுத்தனர். 


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad