குழியான இண்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்ட சாலை, சீரமைக்க கோரிக்கை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 9 July 2024

குழியான இண்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்ட சாலை, சீரமைக்க கோரிக்கை



நீலகிரி மாவட்டம் குன்னூரில் டவுனில் தனியார் உணவகம் முன்பு உள்ள இண்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்ட  நான்கு முனை சாலையில்  மிகவும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது  என பொதுமக்களால் கூறப்படுகிறது.


மேலும்  இங்கு இருபுறமும் வாகனங்கள் இஷ்டத்திற்கு நிறுத்தப்படுவாதல் மிகுந்த நெரிசல் ஏற்பட்டு நடந்து செல்லும் பாதசரிகள் மற்றும் வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் எனவும் கூறப்படுகிறது.எனவே சம்மந்தப்பட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, இந்த இன்டெர்லாக் கற்களை சரியாக பதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது


மேலும் , இங்கு வாகனங்களை இடைஞ்சளாக நிறுத்துவதை   போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள்  சீர் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது


விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் அசம்பாவிதங்கள் ஏதாவது நடப்பதற்கு முன்பு,  பொதுமக்களின் இந்த இரண்டு முக்கிய கோரிக்கைகள் உடனடியாக சரி செய்யப்படுமா? 


 கோத்தகிரி லிருந்து தமிழக குரல் செய்திகளுக்காக தமிழக குரல் செய்தியாளர் C . விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad