உயரும் ஊட்டி உருளைக்கிழங்கின் அதிரடி விலைகள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 25 July 2024

உயரும் ஊட்டி உருளைக்கிழங்கின் அதிரடி விலைகள்



   நீலகிரி மாவட்டத்தில் கேரட் பீட்ரூட் பீன்ஸ் என்று பலவித காய்கறிகள் இருந்தாலும் உருளைக்கிழங்கு என்றாலே அது தனி ஸ்பெஷல் தான். இன்றும் நம்மில் பலர் உருளைக்கிழங்கு என்றால் ஆசைப்படுபவர்கள் அதிகம் காணப்படுகிறார்கள். 


நீலகிரி மாவட்டத்தில் இருந்து மேட்டுப்பாளையம் ஏலம் மையத்திற்கு உருளைக்கிழங்குகள் செல்வது இயல்பு இதுவரை உருழைக்கிழங்குகள் இந்த வருடம் விற்பது போல் எந்த வருடமும் விற்றதில்லை இன்றைய தேதியில் (25 07 2024) 45 கிலோ எடை கொண்ட உருளைக்கிழங்கு மூட்டை இன்றைய தினத்தில் அதிகபட்ச விலை 3500 ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது.


 மற்றும் உருளைக்கிழங்கு ராசியின் 45 கிலோ மூட்டை குறைந்த பட்ச விலை ரூபாய் 2000 க்கும் உருளைக்கிழங்கு தள்ளு பொடியின் அதிக பட்ச  விலை 1650 க்கும் உருளைக்கிழங்கு தள்ளு பொடியின் குறைந்தபட்ச விலை ரூபாய் 1080 க்கும் மற்றும் இன்று மேட்டுப்பாளையம் ஏல மையத்திற்கு வந்த உருளைக்கிழங்குகளின் மொத்த மூட்டை 300 எனவும் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் (NCMS) தெரிவித்துள்ளது. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad