முறையாக அனுமதி பெறாமல் இயங்கியதா மனநல காப்பகம்...? அவிலும் மர்மங்கள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 11 July 2024

முறையாக அனுமதி பெறாமல் இயங்கியதா மனநல காப்பகம்...? அவிலும் மர்மங்கள்



கூடலூர் அருகே உள்ள குந்தலாடி பகுதியில்   மருத்துவர்  மனநல காப்பகம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கூடலூர் கோட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் அந்த காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டனர் அதன் பின் இன்றைய தினம் நெலாக்கோட்டை காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரனை நடைபெற்றது.


ஆய்வின் பொழுது முறையான அனுமதி இல்லாமல் சுகாதாரமற்ற முறையில்,எந்தவித மருத்துவ வசதி இல்லாமல்  மனநல காப்பகம் நடத்தி வந்தது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து  அந்த காப்பகத்தில் இருந்த 13 மனநலம் பாதிக்கப்பட்ட 13 பேர் கோவையில் உள்ள காப்பகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ள நிலையில்,மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி கோட்டாட்சியர் செந்தில்குமார், பந்தலூர் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி மனநல காப்பகத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்க் கொண்டனர்.மேலும் பல்வேறு முறைக்கேடுகள் நடைபெற்றுள்ளது என தகவல்கள் வெளியான நிலையில்,அந்த மனநலம் பாதிக்கப்பட்ட காப்பகத்தின் உரிமையாளரான தலைமறைவாக இருந்த அகஸ்டின், உரிமையாளரின் மனைவி கிரேசி மற்றும் ஊழியர்களிடம் நெலாக்கோட்டை காவல்நிலையத்தில் தேவாலா டிஎஸ்பி சரவணன் தலைமையில் சுமார் நான்கு   மணி நேரத்திற்கு மேலாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

.

மேலும் காப்பகத்தில்  இறந்து போனவர்கள் எப்படி இறந்தார்கள் இதற்கான காரணம் என்ன என்றும்.இந்த காப்பகத்தை நடத்து வதற்கு எங்கிருந்து பணம் வருகிறது இந்த காப்பகத்தை இடம் யார் தந்ததும் என்று.நான்கு மணி நேரம் விசாரனை விசாரனை மேற்க்கொள்ளப்பட்டது..


இதனை தொடர்ந்து  இன்று நெலாக்கோட்டௌ பகுதியில் உள்ள செவலியர்கள் தான் மாதா மாதம் சென்று அவர்களின் உடல் நலத்தை பார்பது வழக்கம் அவர்களிடமும் விசாரனை செய்து காவல்துறை அனுப்பி வைத்தனர் ..மேலும் இந்த விசாரனையில் இந்த காப்பகத்தில் உள்ள மர்மங்களை கண்டு பிடிக்க விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது....



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 


No comments:

Post a Comment

Post Top Ad