கோத்தகிரி சாலையான குன்னூர் ஊட்டி செல்லும் நெடுஞ்சாலையில் சேதமடைந்து, மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள தடுப்பு சுவர் உள்ளது
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காவலர் குடியிருப்பு முன்பு சேதம் அடைந்துள்ள தடுப்புச் சுவர்.வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த அச்சத்துடன் அவ்வழியை கடக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை ஆனது, அதை இனியும் வேடிக்கை பார்க்காமல், உடனடியாக அந்த தடுப்பு சுவரை சீரமைத்துக் கொடுத்தால், பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுவதை முன்கூட்டியே தடுக்கலாம் என, பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கூறி வருகின்றனர்.
இந்த தடுப்புச் சுவர் உடனடியாக சரி செய்யப்படுமா?நெடுஞ்சாலைத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்குமா?
கோத்தகிரி லிருந்து தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment