எம் பாலாடாவில் அமைந்திருக்கும் குட் ஷெப்பர்ட் இன்டர்நேஷனல் பள்ளிக்கு அருகில் அதிநவீன நோயாளிகள் ஆய்வகம் மற்றும் செயலாக்கம் மையம் திறப்பு.
நீலகிரி மாவட்டம் பாலடா பகுதியில் அமைந்துள்ள குட் ஷெப்பர்ட் இன்டர்நேஷனல் பள்ளிக்கு அருகில் ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் அதிநவீன நோயாளிகள் ஆய்வகம் மற்றும் செயலாக்க மையம் பள்ளியின் இணை நிறுவனரும் அறங்காவலருமான திருமதி எல்சம்மா தாமஸ் தலைமை வகித்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஊட்டியில் உள்ள எம் பாலடாவில் உள்ள குட் ஷெப்பர்ட் இன்டர்நேஷனல் பள்ளிக்கு அருகில் உள்ள அதிநவீன நோயாளிகள் ஆய்வகம் மற்றும் செயலாக்கம் மையம் ஆண்டர்சன் டயக்னாஸ்டிக்ஸ் மற்றும் லேப்ஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது ஊட்டி நகரம் குன்னூர் கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இரத்த சேகரிப்பு மையங்கள் விரைவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குட் ஷெப்பர்ட் இன்டர்நேஷனல் பள்ளியின் இணை நிறுவனரும் அறங்காவலருமான திருமதி எஸ் அம்மா தாமஸ் தலைமை வைத்து இந்த மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அருட்தந்தை அடைக்கலம் அவர்கள் பாரம்பரிய குத்துவிளக்கு விளக்கேற்றலில் கலந்துகொண்டு அருளாசி வழங்கினார். இந்த இனிய நிகழ்வில் குட் ஷெப்பர்ட் இன்டர்நேஷனல் பள்ளியின் மூத்த துணைத் தலைவர் திருமதி சாரா ஜேக்கப் குட் ஷெப்பர்ட் இன்டர்நேஷனல் பள்ளியின் தலைவர் திரு ஜேக்கப் தாமஸ் மற்றும் டாக்டர் அசோக் பிரசாத் மற்றும் டாக்டர் உதிதா பிரசாத் டாக்டர் பி சி தாமஸ் அறக்கட்டளை டிரஸ்டிகள் கலந்து கொண்டனர். அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த கிராமத்தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஊட்டி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை சேர்ந்த பிரபல மருத்துவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆண்டர்சன் நோய் அறிதல் மற்றும் ஆய்வகங்களில் உள்ள வசதிகள் ஆண்டரசன் நோய் அறிதல் மற்றும் ஆய்வுகள் சர்வதேச தரத்திலான உபகரணங்களுடன் முழுமையாக பொருத்தப்பட்டுள்ளன இது கண்டறியும் சேவைகளில் மிக உயர்ந்த தரத்தை உறுதி செய்கிறது. இந்த ஆய்வகம் க்ளவுட் அடிப்படையிலான ஆய்வகத் தகவல் அமைப்பைக் கொண்டுள்ளது விரிவான பரிசோதனை அனைத்து வகையான இரத்த அளவுரு பரிசோதனை ணிசினி போன்ற வசதிகள் உட்பட பலதரப்பட்ட சேவைகளை இந்த மையம் வழங்குகிறது. ஆண்டர்சன் டயக்னாஸ்டிக்ஸ் மற்றும் லேப்ஸ் சமூகத்திற்கு சிறந்த நோய் அறிதல் சேவைகள் மற்றும் சுகாதாரமான ஆய்வுகளை வழங்குவதை தனது நோக்கமாக கொண்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment