கொட்டும் மழையில் பச்சை பசேல் என்று காட்சியளிக்கும் முதுமலை சாலை ஓரங்களில் உலா வரும் வனவிலங்குகள்
நீலகிரி மாவட்டம் முதுமலையில் பசுமை திரும்பி உள்ளதால் சாலையோரங்களில் வனவிலங்குகள் வலம் வருவதால் சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யானை புலி சிறுத்தை கரடி காட்டுமாடு மற்றும் பல்வேறு வகையான மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்விடமாக உள்ளது. முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் அவ்வபோது பெய்த மழையின் காரணமாக தற்போது காப்பகத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பசுமை திரும்பி உள்ளது இதனால் விலங்குகள் முதுமலை வனத்திற்கு திரும்பியுள்ளன. தற்போது மான் யானை போன்ற விலங்குகள் அனைத்தும் சாலையோரங்களில் வலம் வருகின்றன குறிப்பாக ஊட்டியில் இருந்து மசினகுடி வழியாக முதுமலை செல்லும் சாலை மற்றும் தொரப்பள்ளி வழியாக முதுமலை செல்லும் சாலைகளில் பல இடங்களில் தற்போது புள்ளி மான்கள் கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன நேற்று முதுமலை வனப்பகுதியில் மழை பெய்தது மழையில் நனைந்தபடி சாலையோரம் குட்டியுடன் உலா வந்த யானை கூட்டம் மற்றும் புள்ளி மான்கள் கூட்டம் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து படைத்தது. கொட்டும் மழையில் உலா வந்த வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment