நீலகிரி மாவட்டம் கூடலூர் கோக்கால் பகுதியில் பல குடும்பங்கள் பல ஆண்டு காலமாக வீடு கட்டி தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகினறனர்.தற்போது பருவ மழை காலம் என்பதால் கனமழை பொழிந்து வருகின்றது.மேலும் மேல் கூடலூர் அரசு மருத்துவமனை விரிவாக்க பணிகளுக்கு வேண்டி பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக அதிகளவு மண் எடுக்கப்டட காரணத்தினால் சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டு வருவதாகவும் எந்த நேரமும் வீடுகள் இடிந்து மிக பெரிய மண் சரிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக அப்பகுதியில் வசித்து வருபவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.இது தொடர்பாக சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் நேரடியாகவும் மனுக்கள் மூலமாகவும் புகார் தெரிவித்து இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே உரிய விசாரணை மேற்கொண்டு நில ஆய்வு மற்றும் மண் சரிவு ஏற்படாமல் இருக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment