கூடலூர் நகராட்சியில் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா தொடங்கி வைத்தார்.
கூடலூர் நகராட்சியில் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்வை கழகத் துணை பொதுச்செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா Bsc ML அவர்கள் தொடங்கி வைத்தார். இன்றைய காலகட்டத்தில் பெரும் சவாலாக இருப்பது உலகம் வெப்பமடைவதும் காலநிலை மாற்றமும் தான் இது சுற்றுப்புற சூழலை பாதித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கழகத் தலைவர் மாண்புமிகு திராவிட மாடல் முதலமைச்சர் திட்டம் நகர்வனம் குப்பை மேலாண்மை என சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் திராவிட மாடல் ஆட்சி வெளியில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் நோக்கில் கூடலூர் நகராட்சியில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட திட்டமிட்டனர் அந்நிகழ்வை மாண்புமிகு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான கழக துணை பொதுச் செயலாளர் ஆ இராசா அவர்கள் கூடலூர் நகராட்சி இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார்கள். முதலில் மாவட்ட கழக செயலாளர் உள்ளிட்ட கழக மாநில மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர் இதனை தொடர்ந்து 2வது வார்டு நகர மன்ற உறுப்பினர் திருமதி ரேவதி நவீன் கிளைக் கழகச் செயலாளர் ஆகியோர்களின் சிறிய முயற்சியில் வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவது பெரும் பாராட்டையும் பெற்று வருகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment