நீலகிரி மாவட்டம் உதகை நகர மன்ற கூட்டம் மன்ற தலைவர் திருமதி. வாணீஸ்வரி அவர்கள் தலைமையில் ஆணையாளர் திரு. ஏகராஜ் , துணை தலைவர் திரு.ஜே . ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது . அப்பொழுது திமுக கவுன்சிலர்கள், தங்களுடைய வார்டுகளில் கழிப்பிட வசதி , நடைபாதை வசதி , குடிநீர் வசதி உள்பட எந்தவிதமான அடிப்படை வசதி திட்டங்களும் நிறைவேற்றுவதில்லை. அதற்கான நிதி ஒதுக்கி டெண்டர் வைப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்கள் . அதை தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் நாகமணி , கீதா , விசாலாட்சி , வனிதா , மேரி புளோரினா , பிரியா வினோதினி , அனிதா , புளோரினா , செல்வராஜ் ஆகிய 9 பேர் வெளிநடப்பு செய்தனர் . திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது .
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment